சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடை வீதி பாலகணேசர் கோவில் மற்றும் ஆனைமலை, கோட்டூர், சுல்தானபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது.