செங்கல்பட்டு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்

செங்கல்பட்டு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-04-20 06:18 IST
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் அடுத்த தென்றல் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெரோராம் (வயது 38), அவரது தம்பி சங்கர் (34) மற்றும் கடை ஊழியர் முபாரக் (36) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

பெரோராம் அதே பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர்கள் நேற்று வேலைக்கு செல்வதற்கு முன்பு சப்பாத்தி செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்தது.

இதில் 3 பேர் மீதும் தீ பரவி அலறி கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். படுகாயம் அடைந்த 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்