ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு

படப்பை அருகே ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-04-20 06:21 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது. ஏரிக்கரையில் அவரது உடைகள், காலி மது பாட்டில், குளியல் சோப்பு போன்றவை இருந்தது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்