மாங்காடு அருகே மொபட்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி

மாங்காடு அருகே மொபட்-லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-04-20 06:24 IST
பூந்தமல்லி,

தாம்பரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). தச்சுத்ெதாழிலாளி. நேற்று மதியம் ஆவடியில் வேலைக்கு செல்வதற்காக ஆன்லைனில் மோட்டார் சைக்கிளை பதிவு செய்து அதில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்தோஷ் குமார் (24) ஓட்டினார்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தோஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்