கோவை கலெக்டர் அலுவலகத்தில் நர்சுகள் தரையில் அமர்ந்துதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நர்சுகள் தரையில் அமர்ந்துதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்;
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்ப டையில் நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களின் பணி ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், பணியில் இருந்து விலகுமாறு அறிவுறுத் தப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துறை சம்பந்தமாக பல அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நர்சுகள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்துதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்., பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர்.