பஸ் மோதி டிரைவர் சாவு

பஸ் மோதி டிரைவர் சாவு;

Update:2022-04-20 23:07 IST
ஆனைமலை

ஆனைமலையை அடுத்த சேத்துமடை அண்ணாநகரை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 50). அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் சேத்துமடையில் இருந்து அம்பராம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்து, பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்