மலைக்கிராமங்களில் நில அளவீடு

மலைக்கிராமங்களில் நில அளவீடு;

Update:2022-04-20 23:07 IST
வால்பாறை

கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தனி தாசில்தார் முருகேசன் தலைமையில் காடம்பாறை, கவர்க்கல், சிங்கோனா ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு வன உரிமை அனுபவ பட்டா வழங்குவதற்கு நில அளவை செய்யப்பட்டது. 

ஏற்கனவே வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வன உரிமை அனுபவ பட்டா வழங்குவதற்கு நில அளவை செய்யப்பட்ட நிலையில், விடுபட்ட மேற்கண்ட 3 மலைக்கிராமங்களிலும் நில அளவை செய்யப்பட்டது. இந்த நில அளவை பணியின்போது வட்ட சார்பு ஆய்வாளர்(நில அளவை) சுபாஷ், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்