லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து;

Update:2022-04-20 23:07 IST
வால்பாறை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து பச்சை தேயிலையை ஏற்றிக்கொண்டு வால்பாறையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் கவர்க்கல் எஸ்டேட்காமாட்சியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. தொடர்ந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், தனியார் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட கோத்தகிரியில் இருந்து பச்சை தேயிலை விலைக்கு வாங்கப்படுகிறது. அதை விரைவாக கொண்டு வர லாரி டிரைவர்கள் முனைவதால், விபத்துகள் அதிகரிக்கிறது. இதற்கு அதிகரிரகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்