மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி;

Update:2022-04-20 23:09 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). இவர் மின்வாரிய ஊழியருடன் இணைந்து தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பொன்னாயூர் நல்லூத்துக்குளியில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே பாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்