வியாபாரிக்கு வெட்டு; 4 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வியாபாரியை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-21 18:04 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே விப்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கன்னியம்மன் கோவில் திருவிழா முடிந்து நடைபெற்ற நாடகத்தை பார்த்து கொண்டிருந்த அதே கிராம, டேங்க் தெருவை சேர்ந்த இளநீர் வியாபாரியான தனசேகர்(வயது 41) என்பவரை மர்மநபர்கள் கழுத்து, இடது கை போன்ற இடங்களில் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தேகத்தின் பேரில் விப்பேடு கிராமத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் விப்பேடு கிராமம் டேங்க் தெருவை சேர்ந்த சந்தானம்(34), அஜித்(26), கார்த்திக்(26), ரவி(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்