ஸ்ரீபெரும்புதூர் அருகே பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது - ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிணமாக கிடந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.;

Update:2022-04-21 18:15 IST
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க பெண் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்த இளம்பெண் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது மனைவி பிரியா (வயது 25) என்பதும், இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

இவருக்கும், காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததும் தெரியவந்தது. பிரியா கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் திருவள்ளூரை சேர்ந்த ஜோதி மற்றும் கள்ளக்காதலன் வெங்கடேன் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே, பிரியா கொலை செய்யப்பட்டாரா அல்லது எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்