ஆண் நண்பருடன் வீடியோகாலில் பேச்சு... கணவர் கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆண் நண்பருடன் வீடியோகாலில் பேசியதை கணவர் கண்டித்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 36). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது தாய்மாமா மகள் கலைவாணி வயது (32). என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சுரேஷ் தனது நண்பருக்கு போன் செய்வதற்காக மனைவியின் செல்போனை எடுத்தார். அப்போது கலைவாணியின் செல்போனில் நிறைய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பதும், நிறைய வாட்ஸ்-ஆப் வீடியோ கால்கள் வந்துள்ளதும் சுரேசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தன்னுடைய மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கலைவாணியின் தந்தைக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.