வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி;

Update:2022-04-21 22:01 IST
வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
போத்தனூர்
 கோவை காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் மதிவாணன் (வயது60). இவர் லோக் ஜனசக்தி கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு அதே கட்சியில் உறுப்பினராக இருந்த கோவைப்புதூர் அறிவொளி நகரைச் சேர்ந்த ரங்கன் (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  ரங்கன் வீட்டு பத்திரம் போன்றவற்றை பெற்று வங்கியில் பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் தொழிலும்  செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரங்கன், மதிவாணனிடம் தமிழ்நாடு வீட்டுவசதி  வாரிய தலைவர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் அதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய மதிவாணன் பதவிக்கு ஆசைப்பட்டு 4 கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தை  ரங்கனிடம் கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் பணத்தை கொடுத்து மதிவாணன் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மதிவாணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாரியத் தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்த ரங்கனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
----

மேலும் செய்திகள்