அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு;

Update:2022-04-21 22:29 IST
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு
கோவை
கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வெறைட்டிஹால் ரோடு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு சங்கத்தின் இணை செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த போலீசார் அந்த பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்றினர்.

விசாரணையில் அந்த பிளக்ஸ் பேனரை வைத்தது அதே பகுதியை சேர்ந்த வசந்த் (வயது 25) என்பதும், சங்கத்தின் இணை செயலாளர் தனக்கு தெரிந்தவர் என்பதாலும், அவருடைய பிறந்தநாளையொட்டி வாழ்த்து கூறி உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்