கோவை
கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக செல்வபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக செல்வபுரம் கல்லாமேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த உன்னி (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 10 மற்றும் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 40 பறிமுதல் செய்யப்பட்டது.