குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-22 15:03 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் கொனேரிகுப்பம் கிராமம் இலுப்பை தோப்பு தெருவை சேர்ந்தவர் வேலு என்ற வேல்முருகன் (வயது 35). இவர் மீது காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை வழக்கு உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, வேல்முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்