காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2022-04-22 10:05 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு காஞ்சீபுரத்தை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆஸ்பத்திரியின் புற நோயாளிகள் பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் உள்ளிட்ட 4 இடங்களில் ஏற்கனவே குடிநீ்ர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதாகி குடிநீர் வனியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் கடந்த 2 நாட்களாக பழுதடைந்து அந்த வளாகத்தில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அவர்களின் உறவினர்கள் என அனைவரும் தண்ணீரின்றி அவதிக்குள்ளானார்கள்.

மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அரசு ஆஸ்பத்திரியில் பழுதடைந்துள்ள அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களையும் சீரமைக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்