ஐ.டி.ஊழியர் தற்கொலை

ஐ.டி.ஊழியர் தற்கொலை;

Update:2022-04-22 21:04 IST
ஐ.டி.ஊழியர் தற்கொலை
துடியலூர்

கோவை துடியலூர் அருகே பன்னிமடை திப்பனூர் சாலையில் உள்ள மருதப்பன் நகரை சேர்ந்தவர் மோகன் குமார்.  இவரது மகன் ருத்ரேஷ் சங்கர் (வயது 22).இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ருத்ரேஷ்சங்கர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல்அறிந்ததுமு் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ருத்ரேஷ் சங்கர், கல்லூரியில் படிக்கும்பொழுதே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

4 ஆண்டுகளாக நன்றாக இருந்த காதல், சமீபத்தில் பிரச்சினையாகி விட்டது. அந்த பெண் சங்கரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து சங்கர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------------

மேலும் செய்திகள்