வால்பாறையில் எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் முகாம் அமைத்து 65 தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது

வால்பாறையில் எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் முகாம் அமைத்து 65 தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது;

Update:2022-04-22 21:36 IST

வால்பாறை

வால்பாறையில் எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் முகாம் அமைத்து 65 தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

எலிக்காய்ச்சல் பாதிப்பு

வால்பாறை அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில்   தொழிலாளியாக பணியாற்றி வந்த தொழிலாளி பவிதாகுமாரிக்கு (வயது36) எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 
அவர் பொள் ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் குழுவினர் இணைந்து சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தினரின் உதவியுடன் பவிதா குமாரி குடியிருப்பு பகுதி மற்றும் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் கிருமிநாசினிகள் தெளித்தனர்.

 மேலும் கொசு மருந்து, தொற்று நோய்தடுப்பு மருந்துகளை தெளித்தனர்.

ரத்த மாதிரி சேகரிப்பு

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் 2-வது நாளாக நோய் தடுப்பு பணிகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அங்கு குடியிருப்பவர்களிடம் எலிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதையடுத்து வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத் துவ குழு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 

அதில், 65 தொழிலாளர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப் பட்டது. 

மருந்து, மாத்திரை

அதன்பிறகு மருத்துவ குழுவினர், எஸ்டேட் தொழிலா ளர்கள் வேலை பார்க்கும் தேயிலை தோட்டங்களுக்கு நேரடியாக சென்று நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிதண்ணீர் தொட்டி கள், சாக்கடை கால்வாய்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது. 

அங்கு உள்ள அனைத்து குடியிப்பு பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்