கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடை, டீக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினார்கள்

கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடை, டீக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினார்கள்;

Update:2022-04-23 19:47 IST

கோவை

கொரோனா தொற்று கோவையில் குறைந்து இருந்தாலும், தொற்று பரவாமல் இருக்க கோவை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. 

கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடை, டீக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நேற்று சோதனை நடத்தினார்கள். 

அப்போது அவர்கள், முகக்கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்க கூடாது. கடை ஊழியர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தனர். 

கணபதி சத்திரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளர் உள்பட 6 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

 இந்த அபராத நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்