காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை

காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை;

Update:2022-04-24 22:01 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த தாடகைமலை அடிவாரத்தில் ஆத்மநாதவனம் உள்ளது. இங்கு சமுக்தியாம்பிகையம்மன், சரபேஸ்வரர், காலசம்ஹார பைரவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்