மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது;

Update:2022-04-24 22:02 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை ஒட்டி முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து ஒருவர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். 

தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் வடகோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்