திருப்போரூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்; தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்பு
திருப்போரூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்களில் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துக்கொண்டார்.;
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம், பொன்மார், மாம்பாக்கம் மற்றும் மேலக்கோட்டையூர் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துக்கொண்டார். இந்த கூட்டங்களில் மக்களோடு, மக்களாக தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.
இ்தனையடுத்து, மாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் நூலக பணிகளை பார்வையிட்ட அவர், விரைவில் நூலகம் கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்தார். புதுப்பாக்கம், பொன்மார் உள்ளிட்ட கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களில் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கிராம சபை கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.