லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

ஆனைமலை அருகே லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.;

Update:2022-04-25 21:22 IST
பொள்ளாச்சி,

ஆனைமலை அருகே அய்யாமடை பிரிவு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நெல் அறுவடை எந்திரத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் லாரி நின்று கொண்டிருந்தது.

 எந்திரத்துடன் லாரியை நிறுத்தி விட்டு சின்ன சேலத்தை சேர்ந்த டிரைவர் விஜி, அறுவடை எந்திர ஆபரேட்டர் வேலு ஆகியோர் சாப்பிட சென்றனர். பின்னர் திரும்பி வந்த போது லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து லாரியில் இருந்து அறுவடை எந்திரத்தை வேகமாக கீழே இறக்கினர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். தகவலின் பேரில் பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய  வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாரி பேட்டரி சூடாகி தீப்பிடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்