வாகனம் மோதி வாலிபர் பலி

மணிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.;

Update:2022-04-26 12:24 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயப்பால் (வயது 32). இவர் மணிமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்