காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெகமத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நெகமம்
நெகமத்தை அடுத்த வடசித்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிவந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்த்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.