நல்லாசிரியர் விருது பெற்ற கிளிக்குடி அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

கிளிக்குடி அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update:2022-04-28 23:59 IST
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் தனபாலுக்கு பாராட்டு விழா கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் தனபாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்