உலர் கழிவுகளை சாம்பலாக்கும் வகையில் ரூ.2 கோடியில் நடமாடும் எரியூட்டும் ஆலை

உலர் கழிவுகளை சாம்பலாக்கும் வகையில் ரூ.2 கோடியில் நடமாடும் எரியூட்டும் ஆலையை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தனர்

Update: 2022-04-29 09:49 GMT
சென்னை,  

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் உலர் கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் நடமாடும் எரியூட்டும் ஆலை செயல்பாடு தொடங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடமாடும் எரியூட்டும் ஆலையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழு தலைவர்கள் சிற்றரசு, டாக்டர் சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்