பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்களுக்கு வலைவீச்சு

பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update:2022-04-29 17:33 IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அரசு மற்றும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார மாணவ, மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையதில் இருந்து பஸ்சில் ஏறி ஆயகொளத்தூர், திருவள்ளூர், சுங்குவார் சத்திரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று முன் தினம் மாலை ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தொடுகாடு, செங்காடு வழியாக திருவள்ளூர் நோக்கி சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதை பார்த்த காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் மாணவர்களை கண்டித்துள்ளனர். 

பஸ் ஆயகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றதும் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் கோபத்தில் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகியோரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த சேது, அமிர்தலிங்கம் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்