தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-04-30 19:40 IST
காஞ்சீபுரம்,  

காஞ்சீபுரம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவை கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, முன்னேற்ற நிலை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்