காதலிக்கு நிச்சயதார்த்தம் ஆனால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
காதலிக்கு நிச்சயதார்த்தம் ஆனால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
கோவை
குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் அனிஸ் (வயது 23). இவர் கோவை பீளமேட்டில் கடந்த ஒரு ஆண்டாக தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கோவையை சேர்ந்த ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையறிந்த அனிஸ் மிகுந்த வனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தனியார் நிறுவன வளாகத்தில் அனிஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.