பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பஸ்சில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது பயணிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-05-02 19:49 IST
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதன்பிறகு கடந்த ஆண்டு மத்தியில் படிப்படியாக பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதும், பொது வெளிகளில் சண்டையிட்டு கொள்வதும் என ஒழுங்கீனமாக நடந்து கொள்வது வீடியோ வெளியாகி ஆசிரியர் மட்டுமல்லாது கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பஸ்சில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தும், மேல் கூரையின் விளிம்புகளை பிடித்துக்கொண்டு நெடுநேரம் பயணம் செய்வது என ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது பயணிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்