தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்;
அன்னூர்
அன்னூரை அடுத்த குன்னத்தூர் ஓரைக்கால்பாளையம் பகுதியில் தனியார் பம்ப் நிறுவனம் உள்ளது. இங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்குவதற்கு விடுதி உள்ளது.
இந்த நிலையில் இந்த விடுதிக்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர். அவர்கள், அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர் பிரசாந்திடம் ஒரு நபர் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பிரசாந்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில், தனியார் நிறுவன ஊழியரை தாக்கியது ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்த ஜீவன் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜீவனை போலீசார் கைது செய்தனர்.
மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.