பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிவகாமிசுந்தரி (25). இவர்களது மகள் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சிவகாமிசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சீ போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்துக்கொண்ட சிவகாமிசுந்தரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த சில நாட்களாக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.