குறளோவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கள்ளக்குறிச்சி ககெ்டர் ஸ்ரீதர் வழங்கினார்

குறளோவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2022-05-05 16:25 GMT
குறளோவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
கள்ளக்குறிச்சி ககெ்டர் ஸ்ரீதர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி, மே.6-
திருக்குறளை இளைய தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற குறளோவியம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டியை  தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தியது. இணையதளம் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். மேலும் குறளோவிய போட்டியில் வெற்றி பெற்ற 40 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.5 ஆயிரம் ஊக்கப்பரிசும், 319 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஆயிரம் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி குறளோவிய போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்ற 2 மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தலா ரூபாய் ஆயிரம் ஊக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்