மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

சங்கரன்கோவி்ல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-05-07 03:56 IST
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி சத்திரப்பட்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வாழவந்தாள்புரம் காலனி அருகே வந்தபோது மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த பொன்னுச்சாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பொன்னுச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்