சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்தவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆசாமி கோவை கோர்ட்டில் சரணடைந்தார்
சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்தவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆசாமி கோவை கோர்ட்டில் சரணடைந்தார்;
கோவை
சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்தவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆசாமி கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.
மறுவாழ்வு மையத்தில் கொலை
சென்னை ராயப்பேட்டை பெரியார்திடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது45). ஆட்டோ கட்டும் வேலை பார்த்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான ராஜை குடும்பத்தினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு 3 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற ராஜ் வீடு திரும்பினார்.
இதனால் அவர், இனிமேல் மது குடிக்க மாட்டார் என்று குடும் பத்தினர் நம்பினர். ஆனால் ராஜ் மீண்டும் மது குடித்து உள்ளார்.
இது பற்றி அவரது உறவினர்கள் போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கடந்த 2-ந் தேதி அந்த மைய ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ராஜை அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் ராஜ் இறந்து விட்டதாக போதை மறுவாழ்வு மையத்தினர் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராஜின் மனைவி கலா மற்றும் உறவினர்கள் சென்று பார்த்த போது ராஜ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
எனவே தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரு டைய மனைவி கலா, சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்திய தில், கட்டையால் அடித்து ராஜ் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
மேலும் அந்த மறுவாழ்வு மையம் அரசின் அனுமதி பெறாமல் செயல்பட்டதும் தெரியவந்தது.
7 பேர் கைது
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து,
அந்த மையத்தின் மேலாளரான பெரம்பூரை சேர்ந்த மோகன் (34), ஊழியர்களான ஓட்டேரி கொசப்பேட்டை யுவராஜ் (26), பாரிமுனை செல்வமணி (36), சூளை சதீஷ் (29), ராயப்பேட்டை கேசவன் (42), நெற்குன் றம் பார்த்தசாரதி (23), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சரவணன் (48) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் சரண்
இதற்கிடையே, வழக்கில் தேடப்பட்டு வந்த மறுவாழ்வு மைய உரிமையாளரின் கணவர் கார்த்திகேயன் கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயனை விசாரணைக்காக அண்ணாசாலை போலீசார், சென்னைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.