கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-14 01:31 IST
புதூர், 
ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஷ் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அப்பன் திருப்பதி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அப்பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 30) என்பவர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்