இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிதம்பரபுரம், சிவபுரம், கள்ளியாறு, அரசபத்து, மஞ்சுவிளை, காமராஜ்நகர், மேலவடகரை, கீழவடகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளைநிலங்களில் அடிக்கடி யானை, கரடி, சிறுத்தை, கடமான்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கூறி, களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், லெனின் முருகானந்தம், அப்பாத்துரை, கோசிமின் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.