முதியவருக்கு கொலை மிரட்டல்
முதியவருக்கு கொலை மிரட்டல் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தொண்டி,
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60).இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சில வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த பனைமரத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நுங்கு மற்றும் பனை பொருட்களை வெட்டி கீழே சாய்த்து சேதப்படுத்தி உள்ளனர். இதனை குணசேகரன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவரை அங்கு நின்றிருந்த வாலிபர்கள் தரக்குறைவாக பேசி கையில் நுங்கு வெட்ட வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துஉள்ளனர். இதுகுறித்து குணசேகரன் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் சோளியக்குடி கிராமத்தைசேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25), ஆரோக்கிய ஆகாஷ் (20), ஆதீஸ்வரன்(22), கார்த்தீஸ்வரன் (20), ராஜேஸ்வரன்(22), கோட்டைச்சாமி (22), மணிகண்ட சுதன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.