மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உதவி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலகுழு தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர்கள் அசோக்ராஜ், நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது அங்கு வந்த தாசில்தார் பாபு, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.