எலெக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை

எலெக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை;

Update:2022-05-18 20:32 IST
எலெக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை
கணபதி
கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் ஜான்சன் (வயது47). எெலக்ட்ரீசியன். ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜான்சன், கணவனை இழந்த வேறுஒரு பெண்ணுடன் கோவை மணியக்காரம்பாளையத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.  அவர் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அவர் போதிய வேலை இல்லாததால் தனது குறைவான வருமானத்தால் குடும்பத்தின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
  இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜான்சன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதனைபார்த்து அதிர்ந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்