ஓசூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

ஓசூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-18 16:48 GMT
ஓசூர்:
தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் முகமது அனீப் (வயது 42). இவர் ஓசூர் பத்தலப்பள்ளியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று முகமது அனீப் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    
Show comments

மேலும் செய்திகள்