தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-22 22:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய உடன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ஊர்வலமாக வந்தனர்

தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. சேகர் நேற்று மதியம் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.கருணாகரனிடம் வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைப்போல் நேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எஸ்.மெர்லின் சுகந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் களை தொடர்ந்து 4 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் செய்திகள்