காங்கிரஸ் கட்சி நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளை பற்றி பேரணிகளில் பேச முடியுமா? பிரதமர் மோடி சவால்

காங்கிரஸ் கட்சியானது பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க விரும்புகிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். #PMModi

Update: 2019-05-08 11:17 GMT
அரியானாவில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, தேசதுரோக சட்டம் மற்றும் ஆயுத படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறுவது என உறுதியளித்து, கல் வீசுபர்களுக்கும் மற்றும் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கவும் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என கூறினார்.

தேசிய கொடியை அவமதிக்கும் கும்பலுக்கு முழு சுதந்திரம் அளிக்க விரும்பும் காங்கிரசின் இதுபோன்ற வாக்குறுதிகளை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, எதிர்க்கட்சி தலைவர்கள் பொது கூட்டங்களில் ஏன் பாதுகாப்பு கொள்கைகளை பற்றி பேசுவதில்லை? என கேள்வி எழுப்பியதுடன், தனது பாதுகாப்பினை வலுப்படுத்திடாத நாடு வல்லரசாக முடியுமா? தன்னை பாதுகாத்து கொள்ள முடியாத ஒரு நாட்டை உலகம் உற்று நோக்குமா? காங்கிரஸ் அல்லது பிற மகாமிலாவதி கட்சிகள் தங்களது பேரணிகளில் நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளை பற்றி பேசியதுண்டா? அவர்களால் பாதுகாப்பு பற்றி எதுவும் பேச முடியாது.  இந்த துறையில் அவர்களின் வரலாறு அப்படி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்