பாராளுமன்ற நிதிக் குழு முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜர் காங்கிரஸ் எம்.பி.க்கள் சரமாரி கேள்வி

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், நேற்று பாராளுமன்ற நிதிக்குழு முன்பாக ஆஜர் ஆனார்.

Update: 2017-01-18 23:03 GMT
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், நேற்று பாராளுமன்ற நிதிக்குழு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது அவரிடம், பண மதிப்பை நீக்குவதற்கான நடவடிக்கை எப்போது தொடங்கப்பட்டது என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே இது தொடர்பான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தொடங்கி விட்டன என்று குறிப்பிட்டார். திரும்பப் பெறப்பட்ட பணத்துக்கு பதிலாக சுமார் ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு ரூ.500 மற்றும் ரூ.2,000 புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற நிதிக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி முறை, உயர் மதிப்பிலான பணத்தை திரும்பப் பெறும் முடிவு போன்றவை குறித்து சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

கூட்டம் முடிந்த பின்பு மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “அவர் (உர்ஜித் பட்டேல்) ஒரு பகுதி கேள்விகளுக்குத்தான் பதிலைத்தான் அளித்தார். முக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. எனவே, அவரும், நிதித்துறை அதிகாரிகளும் பதில் அளிப்பதற்காக மீண்டும் ஒருமுறை அழைக்கப்படுவார்கள்” என்றார். 

மேலும் செய்திகள்