ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: சக போலீஸ் சுட்டதில் 11 போலீஸ்காரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் போலீஸ்காரர்கள் மீது சக போலீஸ் மீது போலீஸ் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 போலீஸ்காரர்கள் பலியாகினர்.

Update: 2017-02-28 08:02 GMT
கந்தகார்,

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேல்மந்த் மாகாணத்தில் போலீஸ்காரர்கள் மீது சக போலீஸ் ஒருவர் திடீரென கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டில் 11 போலீஸ்காரர்கள் பலியாகினர். லஷ்கர் கா என்ற இடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக மாகாண கவர்னர் ஓமர் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் கூறும் போது, துப்பாக்கிச்சூடு  நடத்திய போலீஸ்  உடனடியாக போலீஸ் வாகனத்திலேயே தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடும் போது, போலீஸ்காரர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றையும் அவர் எடுத்துச்சென்றுள்ளார். தலீபான் பயங்கரவாத இயக்கத்தில் சேருவதற்காக அவர் சென்று இருக்கலாம் என கருதுகிறோம் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலீபான் பயங்கரவாதிகள் அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் அண்மை க்காலமாக இது போன்ற தாக்குதல் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. 

மேலும் செய்திகள்