மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார்.;

Update:2026-01-11 19:00 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 11ம் தேதி) மாலை 5 மணிக்கு மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார். அவர் தனது இல்லத்தில் மேலதிக சிகிச்சையைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்