டெல்லியில் 12 வது நாளாக விவசாயிகள் போராட்டம் இன்று மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்

டெல்லியில் 12 வது நாளாக விவசாயிகள் போராட்டம் இன்று மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வது போல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2017-03-25 07:31 GMT
புதுடெல்லி

வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்‌ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள். உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கு எடுத்து செல்கின்றனர். எனினும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில் இன்று விவசாயிகள் 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்., இன்று 3 விவசாயிகள்  அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர்கள் விஷால்மற்றும் குழுவினர் கேட்டு கொண்டத்தற்கு இணங்க அவர்கள் இறங்கி வந்தனர். மேலும் ஒருவர்  இறந்தது போல் படுத்து கிடந்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்துவது போல் போராட்டம் நடத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்