ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலானவை ஆக்கிரமிப்பில் உள்ளது:மத்திய அரசு

ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலானவை ஆக்கிரமிப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2017-07-25 14:22 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே கூறுகையில், “ பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலங்களில் தோராயமாக 10,220 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளால் இவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்